http://www.livemint.com/Leisure/FHbw1rcFUpqYcaR25sr7sO/Listen-to-the-children.html
http://www.livemint.com/Leisure/FHbw1rcFUpqYcaR25sr7sO/Listen-to-the-children.html

 

“சொன்னா எதையாது உடனே கேட்கிறியா? ஒவ்வொரு விஷயத்தையும் 1008 தடவ சொல்லனும்!!

உன்னால என் எனர்ஜிலாம் போகுது!! “ – உங்கள் வீட்டில் குட்டீஸ் இருந்தால் இதை தினமும் ஒரு தடவையாவது சொல்லி விடுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பாதி நேரம் நாம் பேசுவதை குட்டீஸ் கவனிக்கிறார்களா என்பதே கேள்விக்குறி தான். அதனால் தான் நீங்கள் டென்ஷனாகி கத்தினால் மட்டுமே, பயத்தில் வேலை நடப்பதை காண்பீர்கள். இதற்கு எல்லாம் மாறாக அவர்களாகவே முன் வந்து நீங்கள் சொல்வதை கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? “அதெல்லாம் கனவுல மட்டும் தாங்க நடக்கும்!” என சொல்கிறீர்களா? கொஞ்சம் யோசியுங்கள். முதலில் நாம் நம் குழந்தைகளிடம் சரியாக தான் பேசுகிறோமா? “சரியானா?” என்று நீங்கள் குழம்புவது புரிகிறது. சொன்னதை கேள் என குழந்தைகளை திட்டும் முன், அவர்கள் கேட்கும் படி தான் நாம் சொல்கிறோமா என என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?

நீங்கள் உங்கள் பழகு முறையை மாற்றினாலே அவர்கள் தாமாக மாறிவிடுவர். அந்த சீக்கிரட்ஸ் இதோ உங்களுக்காகவே:

இணைப்பை உருவாக்குதல்

கவனித்து இருக்கிறீர்களா? பெற்றோர்களுடன் நெருக்கமாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் நன்றாக தெரிந்திருக்கும். “அந்த அலமாரியை தொடாதே” என்று ஒரு முறை கூறினாலே போதும், அடுத்த முறை பெற்றோர்கள் அருகில் இல்லை என்றாலும் அந்த குழந்தை அல்மாரியை தொடாது. உங்கள் குழந்தை கேட்க மறுக்கிறது என்றால் முதலில் அந்த இணைப்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவர்களுடன் விளையாடுங்கள், பேசுங்கள். அவர்கள் பேசுவதையும் பொறுமையாக கேளுங்கள். அவர்களை நீங்கள் என்று முழுமையாக புரிந்து கொள்கிறீர்களோ அன்று அவர்களும் உங்களை புரிந்து கொள்வர்.

அளவாக கட்டளை இடுதல்

எப்போழுதும் யாராவது உங்களை “அதை செய்யாதே!”, “இதை இப்படி செய்”, “இதை ஏன் இப்படி செய்கிறாய்?” என விரட்டிக் கொண்டே இருந்தால், அதை விரும்புவீர்களா? குழந்தைகளும் அப்படி தான். சிறிது நேரத்தில் கவனிப்பதையே நிறுத்திவிடுவர். எது முக்கியமோ அதை மட்டும் கட்டளையிடுங்கள். மற்றதை பணிவாக சொல்லுங்கள். நாட்கள் செல்ல செல்ல அவர்களாகவே புரிந்து கொள்வர் முக்கியத்தும் அளிக்கும் கலையை.

மென்மையாக பேசுதல்

நம்பினால் நம்புங்கள்! வார்த்தைகளை விட பேசும் தொணி இருக்கின்றதே, அதற்கு தான் மாயங்கள் செய்யும் ஆற்றல் அதிகம். கத்தாமல், அதட்டாமல், மென்மையாக உங்கள் கோரிக்கையை குழந்தைகள் முன் வைத்து பாருங்கள்; உங்கள் வார்த்தைகளை கவனிப்பார்கள். வேலையும் உடனே நடக்கும்.

கண் பார்த்து பேசுதல்

பக்கத்து ரூமில் இருந்தோ, மாடியில் இருந்தோ பல முறை கத்துவதை விட, உங்கள் குழந்தை அருகில் சென்று கண் பார்த்து பேசுங்கள். உங்கள் என்ர்ஜியும் வீண் போகாது, அவர்கள் நிஜமாகவே கவனிக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வேறு வேலையில் இருந்தால் கூட, பணிவாக அவர்கள் கவனத்தை உங்கள் பக்கம் திருப்புங்கள்.

மறுமுறை கேட்டு அறிதல்

ஒரு விஷயத்தை சொன்ன பிறகு, உங்கள் குழந்தை கவனிப்பதை போல் தெரியவில்லை என்றால் திட்டாதீர்கள். அதற்கு பதில் நீங்கள் கூறியதை திரும்பிச் சொல்ல சொல்லுங்கள். எதை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.  ஏனெனில் இக்கால குழந்தைகள் விளையாடுவது போல் தெரிந்தாலும், சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை உண்ணிப்பாக கவனிக்கின்றனர்.

எப்போதும் நீங்களே என்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பதை விட, அவர்களை சொல்லச் சொல்லுங்கள். உதாரணமாக, “ஸ்கூலில் இருந்து வந்ததும் இதையேல்லாம் செய்” என்பதற்கு பதில், “ஸ்கூலில் இருந்து வந்ததும் என்னலாம் செய்யனும்?” என கேட்டு அவர்களிடம் இருந்தே பதில் பெறுங்கள்.

மரியாதை அளித்தல்

நெகட்டிவான வார்த்தைகளுக்கு நோ நோ நோ! உன்னால் தான் எல்லாம் என்றோ, சோம்பேறி என்றோ ஒரு போதும் சொல்லாதீர்கள். அதற்கு பதில் சாரி, ப்ளீஸ், தாங்யூ  சொல்லுங்கள், சொல்லவும் பழக்குங்கள். நமக்கு மரியாதை அளிக்கும் இடத்தில் நாமும் மரியாதையாக நடந்து கொள்வோம் அல்லவா? அதையே தான் குழந்தைகளும் விரும்புவர்.

சுருங்கச் சொல்லுதல்    

“எவ்வளோ நேரமா கத்திக்கிட்டிருக்கேன். ஸ்கூலுக்கு டைம் ஆச்சு, இன்னும் பாட்டிலுக்கு தண்ணி ஊத்தல! தெனமும் சொல்லனுமா உனக்கு! நீயா எப்போ தான் செய்வ இதெல்லாம்?”. இந்நேரம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே உங்கள் குழந்தைக்கு புரிந்திருக்காது. ஸ்கூலுக்கு சீக்கிரம் கிளம்பனுமா? இல்லை பாட்டிலுக்கு சீக்கிரம் தண்ணி ஊத்தனுமா? தானாகவே இதெல்லாம் தினமும் சொல்லாமல் செய்யனுமா?. எனக்கே சற்று குழப்பமாக தான் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக சொல்லுங்கள்; ஒவ்வொன்றாக சொல்லுங்கள். குழந்தைகள் நம்மை போல் இல்லை அல்லவா?, எல்லாவற்றையும் சட்டென புரிந்து கொள்வதற்கு.

நேரம் அளித்தல்

ஆபிஸில் பாஸ் திடீரென எதாவது வேலை சொல்லி, உடனே செய்ய சொன்னால் எப்படி இருக்கும்? நீங்கள் வேறு எதாவது முக்கியமாக செய்து கொண்டு இருப்பீர்கள். அதெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் நான் சொன்னதை செய் என்று நின்றால்? இதை ஞயாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் குழந்தைகளை ஒரு வேலை செய்ய சொல்லும் போது. உடனே செய் என்று சொல்லாமல் சிறிது நேரம் அளித்து அதன் பிறகு செய்ய சொல்லுங்கள். ஏனெனில் அவர்களுக்கு ‘டாம் அண்டு ஜெர்ரி’ தான் முக்கியமாக இருக்கும்.

உன்னிப்பாக கவனித்தல்

இவை எல்லவற்றிற்கும் மேலாக வேறு ஏதேனும் காரணம் உள்ளதா  உங்கள் பேச்சை அவர்கள் கேட்காமல் இருப்பதற்கு என கவனியுங்கள். அவர்கள் தடுமாறும் போதும் நலமுடன் இருக்கும் போதும் நன்றாக கவனியுங்கள். இவையே இயல்பான காரணங்களாக  இருப்பது:

மெதுவாக புரிந்து கொள்ளும் சக்தி – மெதுவாக பேசுங்கள்; யோசிக்க நேரம் கொடுங்கள்.

வெவ்வேறு செயல்கள் செய்வதில் தடுமாற்றம் – என்ன செய்ய வேண்டும் என்று முன்னரே சொல்லுங்கள் ; அடுத்ததை செய்ய சொல்லும் முன்னர் நேரம் கொடுங்கள்.

காட்சிகள் மூலம் கற்றல்செயல் வழியே சொல்லுங்கள்; நீளமாக பேசாதீர்கள், செயலாற்றும் திறன் குறைவு – கற்றுக் கொடுங்கள்

குழந்தைகள் வேண்டும் என்றே நம் சொல்வதை கேட்காமல் இருப்பதில்லை. ஏதோ ஒன்று அவர்களை தடுக்கின்றது. அவ்வளவுதான். அதை மட்டும் தெரிந்து கொண்டு அதற்கு தக்க நாம் மாறிக்கொண்டால் போதும் இனி என்ன சொன்னாலும் கேட்பார்கள்.

ஏனெனில் மாற்றங்கள் நம்மிடம் இருந்து ஆரம்பிக்கும் போது தானே அதன் ரிசல்ட் முழுமையாக இருக்கும்?. மாறுவோமா இன்றே…..

மூலம்- http://www.therealisticmama.com/9-tips-to-get-kids-to-listen/

தமிழில்- ஜெயஸ்ரீ ரமேஷ்