Trisha-Prabhu_docpage

சமூக வளைதளங்களில் கடுஞ்ச் சொற்களை காண்பது இந்நாட்களில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதில் மிகவும் கொடுமையானது என்னவென்றால் பலர் அர்த்தம் தெரியாமலே அச்சொற்களை பயன்படுத்துவதுதான். அதிலும் இளம் வயதினரே அதிகமாக இருக்கின்றனர். சமூக வளைதளங்களில் இவ்வகையான முறைகேடுகளை எதிர்த்து பதிவு செய்ய வாய்ப்புகள் இருந்தும் பெரும்பாலான மக்கள், மௌனமாகவோ அல்லது அவர்களும் பதிலுக்கு பதிலோ பேசிவிட்டு செல்கின்றனர். வார்த்தைகளுக்கு கத்தியை விட கூர்மை அதிகம் என அடிக்கடி நாம் மறந்துவிடுகின்றோம். இதனை  தடுப்பதற்க்கு நமக்கு மனம் இருந்தாலும், 15 வயது த்ரிஷா பிரபுவிற்க்கு மட்டுமே திறன் இருந்திருக்கின்றது.   

இணையம் மூலமாக வன் கொடுமைகளுக்கு ஆளாகி, இறுதியில் அதனால் தன் உயிரயும் மாய்த்துக் கொண்ட 11 வயதான முகம் தெரியாத ஒரு சிறுமியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ‘ரீதிங்க்’ எனப்படும் த்ரிஷாவின் மென்பொருள். மேலும் தனக்கு வந்த இணையம் மூலமான மிரட்டலும் இந்த மென்பொருள் பிறந்ததற்கான காரணம் எனவும் த்ரிஷா பிரபு கூறுகிறார்.

இந்த ரீதிங்க் என்னும் மென்பொருள் ஒரு ‘அட் ஆன்’ (add on) செயலி போல் செயல்படுகின்றது. இது வளைதளங்களில் டைப் செய்யும் போது, சொற்களை கவனிக்கின்றது. அப்போது அதற்கு ஏதேனும் கடுஞ் சொற்கள் (சைபர் புல்லியிங் ரிசேர்ச் சென்டரால் கண்டுக்கொள்ளப்பட்ட சொற்கள்) தென்பட்டால் அதனை சுட்டிக்காட்டி ‘இதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாமே’ என மென்மையாக ஒரு செய்தியை திரையில் காட்டும். இதனை கண்ட 93 சதவீத மக்கள் உடனடியாக தன் சொற்களை மாற்றிக் கொண்டதாக த்ரிஷா தன் ஆராய்ச்சி மூலம் கண்டுக்கொண்டுள்ளார்.         

தன் முயற்சியை அதனுடன் நிறுத்திக் கொள்ளாமல், சிக்காகோ முதல் வெள்ளை மாளிகை வரை இதை எடுத்து சென்று இளம் வயதினரின் யோசிக்கும் முறை மற்றும் இணையம் மூலமான இன்னல்கள் பற்றியும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திவருகிறார். இவர் மேலும் தன் ஆராய்ச்சி பற்றி வாஷிங்க்டன் டிசியில் நடைப்பெற்ற ‘மிலிட்டரி சைல்ட் எஜூகேஷன் கோஅலிஷன்’ மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம்.

த்ரிஷாவின் செய்தி மிகவும் எளிமையானது: “இளம்வயதினர் வினாடி நேரத்தில் சிந்தித்து செயல்படும் மனதினர். இதனால் தான் முன்யோசனை இல்லாமல் கடுஞ் சொற்களை உபயோகப்படுத்துகின்றனர்”  

தான் ஜூலை 2013 அன்று, ஒரு சிறுமி இணையம் மூலமான வன் கொடுமை தாளாமல் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக படித்த செய்தி தன்னை பெரிதும் பாதித்ததாகவும் அப்போது தான் ஏன் சமூகம் இத்தகைய வன் கொடுமைகளை ஏற்றுக் கொள்கிறது என தான் முதலில் சிந்திக்க துவங்கியதாக கூறுகிறார்.  

இதற்கு தன் ரீதிங்க் மென்பொருள் ‘நில்…யோசி…செல்…’ என தீர்வு தரும் என நம்புகிறார்.

இவரை பற்றிய காணொளி : 

மாறுவோம்.

மாற்றுவோம் உலகத்தை.

மூலம்- http://thelogicalindian.com/story-feed/achievers/trisha-prabhu-a-15-year-old-tech-genius-who-is-using-her-coding-skills-to-curb-cyber-bullying/

தமிழில்- ஜெயஸ்ரீ ரமேஷ்