el-empleo_ docpage

“எல்லா விலங்குகளும் சமமானவையே. ஆனால் சில விலங்குகள் மற்றவையை விட அதிக சமமானவை” George Orwell விலங்குப் பண்ணை (Animal Farm)

El Empleo (The Employment – வேலை) எனும் இந்த குறும்படத்தைப் பார்க்கும் பொழுது அதிகாரப்படிநிலையையும், அதன் துஷ்பிரயோகங்களையும் தற்காலத்தில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும் தவிர்க்க முடியாதென்றே தோன்றுகிறது.

2008-ல் வெளியானதில் இருந்து இதுவரை 75-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் வென்றிருக்கும் இக்குறும்படத்தை Santiago Bou Grasso என்பவர் இயக்கியிருக்கிறார். இக்குறும்படத்தின் கதையை நான் இங்கே விவரிக்கப்போவதில்லை. ஆறரை நிமிடம் ஓடும் இக்குறும்படத்தைப் பார்த்து அவரவர்களுக்கான கருத்தை அவர்களே வரித்துக்கொள்ள வேண்டியதுதான்.
நம்மில் பலரும் பரதேசி படத்தில் வரும் கண்காணியைப் போல தான். மிதிக்கப்படுவதும், மிதிப்பதுவுமாகவே வாழ்க்கையைக் கழிக்கிறோம். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம்மில் பெரும்பாலானோர் மிதிக்கப்படுவதை மட்டுமே ஒத்துக்கொள்கிறோமே ஒழிய நாம் மற்றவர்களை மிதிப்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறோம் – பல சமயம் தெரிந்தே.

வெங்கடசுப்ரமணியம் எழில்மணி 

Picture Credit- https://goo.gl/A0f870