childrens using internet_docpage
http://news.bbcimg.co.uk/media/images/80328000/jpg/_80328058_80322452.jpg

இன்றைய நாட்களில் இன்டர்நெட் பயன்பாடு என்பது இந்திய நகர வாழ்க்கையின் பிரிக்க இயலா ஒன்றாக மாறிவிட்டது .இக்காலக் குழந்தைகள் இந்த டிஜிட்டல் உலகின் திறவுகோல்களை எளிதாக கையாளவும்,பயன்படுத்தவும் வெகு விரைவில் கற்றுக் கொண்டுவிட்டனர்.(பெரியவர்கள் துணையோ,உதவியோ,மேற்பார்வையோ துளியும் தேவைப்படாத அளவுக்கு இதன் பயன்பாட்டு நுணுக்கங்களை எளிதில் கற்றுக்கொள்ளும்படி வேறெந்தத் துறையும் சமீப காலங்களில் சந்தித்ததில்லை ; மேலும் சம வயதினர் (peer) தரும் குறிப்புகள் அவர்களின் மனதில் நன்கு பதிந்து விடுகிறது : பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம்தான் ஸ்மார்ட் அலைபேசியின் பல்வேறு குணாதிசயங்களை ஐயம் திரிபுற கேட்டு அறிந்து கொள்கிறார்கள் – பெருமையாக தங்கள் சுற்றத்தாருடன்,நண்பர்களுடன்  பகிர்ந்துகொள்ளும் விஷயமாகவும் இது ஆகிவிட்டது …)

ஆனால் இந்த நவீன தொழில்நுட்பத்தின் இருண்ட பகுதி ஒன்றிருப்பதை பல பெற்றோர்கள் அறிய மாட்டார்கள் .

உடலாலும்,மனதாலும் முதிர்ச்சி அடையாக் குழந்தைகள் – குறிப்பாக நகர்வாழ் குழந்தைகள் ( 8 லிருந்து 13 வயதிற்குள் ) – கிட்டத்தட்ட 73 சதவிகிதத்தினர் சமூக வலைத் தளங்களில் உலவுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .இந்த ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா உன்னி நாயர் – இத்தகைய செயல்பாடுகளில் வயது முதிர்ந்தோரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளுதல், அவர்கள்  சைபர் குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஏதும் செய்கிறார்களா என்பதை ஆய்தல் முக்கிய கருதுகோளாக கொண்டது.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை குறி வைக்கும் போலி இ-வணிகத் தளங்கள், கொடுமையான விளையாட்டுத் தளங்கள், வன்புணர்ச்சி வலை விரிக்கும் தளங்கள் என இந்த இருண்ட உலகின் பல்வேறு கூறுகள் .

http://www.techsiren.com/wp-content/uploads/2013/11/facebook-teens-under-18.jpg
http://www.techsiren.com/wp-content/uploads/2013/11/facebook-teens-under-18.jpg

வலைத்தளத்தில் தன் புகைப்படம் போடுதல் எத்தனை ஆபத்தான ஒன்று என்பதை பல பெற்றோர்களே அறிய மாட்டார்கள் . இன்டர்நெட் நெறிகள் ,தூய்மை கோட்பாடுகள் போன்ற சொற்களை கேள்வியே பட்டிருக்காத பெரியவர்கள் பலரும் உளர் ; சிறு வயதில் அன்பான வார்த்தைகளால் கவரப்பட்டு ,பின்னால் கொடிய காரியங்களை செய்யத் தூண்டும் grooming என்னும் புதிய அபாயம் பற்றியும் பலரும் அறியமாட்டார்கள் .

2014 இல் Assocham (அசோசியேட்டட் சேம்பர் ஆப் காமர்ஸ் – இந்தியா )என்னும் பிரபல குழு நடத்திய ஒரு கள  ஆய்வில் தெரிய வருவது – வயது முதிர்ச்சி அடையா குழந்தைகள் பலரும் முகநூல் (facebook) தளத்தில் பதிவு செய்ய உதவியதே அவர்களின் பெற்றோர்கள்தான் ! வயது 8 முதல் 13 வரை உள்ள குழந்தைகள் முகநூலில் இருக்கிறார்கள் என்பது 75 சதம் பெற்றோருக்குத் தெரிந்த தகவல்தான். வயதைத் தவறாகக்  கூட்டி தெரிவிக்குமாறு தூண்டியவர்களும் பெற்றோர்களே .

இந்த குழுவின் ஆய்வில் தெரியவரும் வேறு பல தகவல்கள் :

  • 82 சதவிகித பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முகநூல் பதிவை துவக்கி வைக்கின்றனர் .
  • பெரும்பாலான பெற்றோர்கள் முகநூல் பதிவுக்கு குறைந்த பட்ச வயது வரம்பு இருப்பது சரியே என்று கருத்து சொன்னார்கள் .
  • 78 சதவிகிதம் பேர் சொல்வது – பள்ளி சம்பந்தமான வேலைகள் ,பிராஜெக்ட்கள், சக நண்பர்களுடன் தொடர்பு கொள்வது      – இதற்காக பொய்யான வயது தெரிவித்து சேருவதில் தப்பில்லை .
  • Facebook -இன் அதிகார பூர்வ வயது நிர்ணயம் – வயது 13 என்று தெரிவிக்கிறது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு (tier) நகர் வாழ் குழந்தைகளில் வயது 8 முதல் 13 வரைக்குள் இருப்பவர்களில் 73 சதம் முகநூலில் இருக்கிறார்கள் .

பெரும்பாலும் தங்களின் புகைப்படங்கள் ,விடியோக்கள் -இவற்றையே முகநூலில் குழந்தைகள் பதிவு செய்கிறார்கள். 8முதல் 13 வயதுள்ள குழந்தைகள் பெரிதும் பயன்படுத்துவது முகநூல் மட்டுமே ; கூகிள் பிளஸ் ,Flickr ,Pinterest ,ஸ்நாப்சாட் -போன்ற தளங்களை நாடுவோர் வயது 10 முதல் 16 வரையுள்ள சிறார்கள் (85 சதவிகிதம்).

அநேகப் பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் கணினி வாங்கிக் கொடுப்பதே ஒரு ஆடம்பர மதிப்பீட்டுக்குத்தான் .

http://cdn1.wn.com/ph/img/22/2e/a7b8038b3700c964361d8f32e40a-grande.jpg
http://cdn1.wn.com/ph/img/22/2e/a7b8038b3700c964361d8f32e40a-grande.jpg

தங்கள் குழந்தைகளுக்கு கொடிய தீமையின் பிடியில் சிக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்னும் எண்ணமே – நெருப்புக் கோழி மனப்பான்மை – பலருக்கும் உள்ளது. அசம்பாவிதமாக ஏதும் நேர்ந்துவிடும் சமயங்களில் , சமூகம் என்ன சொல்லும்,பழிக்கும் ? என்றே எண்ணி அதை மூடி மறைக்கப் பார்ப்பவர்களே அதிகம்; போலீஸ், சைபர் குற்றம் விசாரிக்கும் சிறப்பு குழுவினர் – இவர்களை அணுகுவதே இல்லை .

சட்டம் காப்பற்றுமா ?

இந்திய சைபர் விதிகள் – பிரிவு 67 மற்றும் 66B  – இது போன்ற சமூக வலைத்தள ஆபாசங்கள் ,நீலப் படங்கள் ,விடியோ பதிவுகள் தண்டனைக்குரிய குற்றமாகவே கருதுகிறது. நீருபிக்கப் பட்டால், நீலப் படங்கள் பார்த்தல் – மூன்று வருட சிறைத் தண்டனையும் 5 லட்ச ரூபாய் தண்டத் தொகையும் என்றும்,

நீலப் பட பதிவுகளை வலைத்தளங்களில் ஏற்றினால் ஐந்து வருட தண்டனையும் 10 லட்சம் ரூபாய் தண்டத் தொகையண்டு. இந்த சமூக  வலைத்தளங்களில் ‘தனி நபர் சுதந்திரத்தை (privacy )அத்துமீறும்’ நடவடிக்கை பற்றிய கவனம், ஈர்ப்பு  முக்கியமாக

கருத்தில் கொள்ள வேண்டும். மேலைநாடுகளில் இதற்கான சட்ட அமைப்புகள் வலுவாக வேரூன்றி உள்ளன. இந்தியாவில் அத்தகைய அமைப்பு ஒன்று உருவாக்கப் படவேண்டும் .

சைபர் குற்றங்களை புலனாய்வு செய்யும் ஒரு வல்லுநர் குழு – நீதி மன்றங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் .

முதலில் குழந்தைகள்,பெற்றோர்கள்,போலீஸ்,நீதித்துறை மற்றும் மீடியாக்கள் – யாவரும் இதுபற்றிய ஒரு விழிப்புணர்வு கொள்ள வேண்டும். சென்னை டி.ஏ.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வர்மா சொல்வது போல் – குழந்தைகளை இன்டர்நெட் பக்கமே வரவிடாமல் தடுப்பது உதவாது ; பல விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ள உதவும் இன்டர்நெட் – அதன் தீமையான பக்கங்களைப் பற்றியும் எச்சரிக்கை செய்வதே உசிதம் .

சிறப்பான இன்டர்நெட் பயன்பாடுகள்,அதை நெறிப்படுத்தும் வழிமுறைகள், பாதுகாப்பான செய்முறைகள் பற்றி இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும்  (Dept. of Electronics & Info.Technology ), கூகிள் மற்றும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் – இந்தியா (CERT-IN ) இவை இணைந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது :  இன்டர்நெட் பாதுகாப்பு பிரசாரம் .

இதன் தலைவர் சேத்தன் கிருஷ்ணசுவாமி கூறியபடி , பாதுகாப்பு என்பது சட்டம் கவனித்துக் கொள்ளும் என்று விடாமல்,மக்கள்,பெற்றோர்கள் ஒரு விழிப்புணர்வோடு செயல்பட்டால் பிரச்சனையை வேரோடு கிள்ளி எறியலாம் .

மூலம்- http://indiatogether.org/preventing-kids-from-becoming-easy-prey-for-cyber-criminals-children

ஆசரியர்- சுப்ரியா உன்னி நாயர் 

தமிழில்-  சங்கர் கணபதி