http://eyam.co.in/?p=1370&preview=true&preview_id=1370&preview_nonce=924f9bab04
http://www.thealternative.in/society/visit-sadhana-forest-auroville/

http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc
http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc

 

ஆரம்பம்

அவிரமும் (Aviram) யோரித் ரோசின்னும் (Yorit Rozin) தங்களின் ஒரு வயது மகளான ஓஷருடன் (Osher) 13 வருடங்களுக்கு முன் ஆரோவில்லுக்கு குடிபுகுந்தபோது அவர்களுடைய விருப்பம் ஒன்றே ஒன்றாகத்தான் இருந்தது. சேவை புரியும் வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம். அவிரம் மனோதத்துவ நிபுணராகவும் பின்னர் வர்த்தக பிரதிநிதியாகவும் இருந்தவர். யோரித், இஸ்ரேலில் கட்டிடக் கலைஞராக பணிபுரிந்தவர். குறுகிய நோக்கங்களுக்காக வாழும் சராசரி வாழ்க்கை இருவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஒருமுறை வந்ததில் இந்தியாவின்பால் காதல்வயப்பட்டு இஸ்ரேலை துறந்தனர். இந்தியாவை தங்களின் வாழ்விடமாக மாற்றிக்கொண்டனர். பல சமூகக்குழுக்களில் வாழ்ந்த அவர்கள், கடைசியாக ஆரோவில் பண்படுத்துவதற்காக தங்களுக்கு அளித்த 70 ஏக்கர் நிலத்தில் தங்கினர். அது யாரும் விரும்பாத தரிசு நிலம். ஆனால் அவிரமும் யோரித்தும் சந்தோஷமாக வேலையை ஏற்றுக்கொண்டனர். காடுகளை வளர்க்கும் குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு சமூகக்குழுவை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் அந்த நிலத்தில் அவர்கள் நட்ட மரங்கள் அனைத்தும் செத்துப்போயின. மண் மலடாகியிருந்தது. முன்னனுபவம் இல்லாததால் ரோசின் தம்பதி இந்த வேலையைப் பற்றி கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். குளங்கள் வெட்டுவது, மரங்கள் நட புது உத்திகள், தண்ணீர் சேமிக்கும் வழிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மனிதக் கழிவை உரமாக்குவது, சமூகக்குழு முறைகள் போன்ற அனைத்தையும் கற்றனர். சாதனா காடு உருவானதற்கு இவைதான் அடித்தளம்.

http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc
http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc

 

தானம்

சாதனா காட்டில் பணம் என்பது ஒரு பொருட்டே அல்ல. உங்களிடம் பணம் இருந்தாலும் இல்லாவிடினும் அது அங்கே வெறும் தகவல் மட்டுமே. அதைத் தாண்டிய முக்கியத்துவம் அதற்கு இல்லை. நாம் வாழும் முதலாளித்துவ சமூக முறையில் இருப்பது போல் நல்ல உணவு, சுத்தமான தண்ணீர், அன்பு, அறிவு போன்றவை விலை போகும் பண்டங்களாக அங்கு இருக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை இவையாவும் அபரிமிதமாகவும் இலவசமாகவும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். இங்கு நடத்தப்படும் பயிற்சிகள் யாவும் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. ஒத்துழைக்கும் விளையாட்டுகளுக்கு அரை நாளும், வனவியல் மற்றும் தண்ணீர் சேமிப்புக்கு இரண்டு நாள் பயிற்சியும், சமூகத் தொழில் நிபுணத்துவத்துக்கு ஒரு வார காலப் பயிற்சியும் தங்கிப் படிக்கும் வகையில் ‘விவசாயச் சூழல்’ படிப்பு இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

 

http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc
http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc

 

வசுதைவ குடும்பகம்

வித்தியாசமான வாழ்க்கை வாழ விரும்பும் பல இளைஞர்களுக்கு சாதனா காடு புகலிடமாக மாறி வருகிறது. அவர்களுக்கு அகத்தூண்டுதலையும், வழிகாட்டுதலையும், ஆதரவையும் சாதனா காடு தருகிறது. இதில் பெரும்கூட்டம் பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து மாற்றம் தேடி வரும் சோர்வடைந்த ஐடி ஊழியர்கள்தான். பூவுலகில் எளிமையாகவும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கும் குழு வாழ்க்கையும் ஈர்த்து அவர்கள் வருகின்றனர். சமைப்பது, தோட்ட வேலைகள், கழிப்பறை சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளும் அங்கு வாழும் அனைவராலும் பகிர்ந்து செய்யப்படுகின்றன.

http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc
http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc

 

கல்வி

அவிரம் மற்றும் யோரித்தின் இரண்டாவது மகளான 7 வயது ஷலவ் பள்ளிக்கூடத்துக்கு சென்றதே இல்லை. பல தலைமுறைகள் வாழும் இயற்கை சூழலில் வளரும் குழந்தைகள் ஒழுக்கமானவையாகவும் வாழ்க்கைத் திறன்களிலும் கலைகளிலும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அங்கே உடல் மற்றும் அகச்சூழல் பாதுகாப்பாக இருக்கின்றன. வரையறுக்கப்படாத நேரம் அதிகம் இருக்கிறது. வளர்ந்தவர்கள் செய்யும் பல வேலைகளை செய்ய குழந்தைகளும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவற்றால் வெளி உலகில் கிட்டாத, குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டமும் அவர்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கான எண்ணற்ற திறப்புகளும் இங்கு கிடைக்கின்றன.
ஓஷர் பத்து வயதாக இருக்கும்போதே 100 பேருக்கு சமைத்துப் போடுவாள். வளர்ந்தவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பயிற்சி நடத்தியிருக்கிறாள். பிரச்சினைகளுக்கான தீர்வு கண்டறியும் குழுக்களிலும் இருந்திருக்கிறாள். வழக்கமான வாழ்க்கைமுறையில் இவையெல்லாம் முக்கியத்துவமற்ற விஷயங்களாக தெரியக்கூடும். ஆனால் இனி வரும் காலத்தில் இவை முக்கியமான திறன்களாக இருக்கும். முக்கியமாக பத்து வயதில் இந்த திறன்கள் கைகூடுகிறது என்றால் கண்டிப்பாக சாதனைதான். அதுவும் முற்றிலும் இயற்கையாக, தன்னிச்சையாக.
சாதனா காட்டில் மற்றுமொரு முக்கியத் திட்டம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. குழந்தைகள் நிலம் எனப்படும் ‘Children’s Land’ திட்டம். 2.7 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் மொத்தமும் குழந்தைகளால் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டு வளர்ந்தவர்களின் உதவி கொண்டு அமைக்கப்பட்டது. மரங்கள், சிறு தோட்டம், மனிதக் கழிவை உரமாக்கும் கழிப்பறை, ஒரு மறுசுழற்சி நிலையம் போன்றவை இடம்பெற்றுள்ளன. உள்ளூர் குழந்தைகள் வாரத்துக்கு நான்கு நாட்கள் வந்து தினம் அரை நாளை இந்நிலத்தில் செலவழிக்கின்றனர். நிகழ்வுகளை நடத்தும் தன்னார்வ ஊழியர்கள் குழந்தைகளின் விருப்பங்களை கேட்டறிந்து நடவடிக்கைகளை உருவாக்குகின்றனர். தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றுவதையோ அல்லது குளத்துக்கு அணை கட்டுவதையோ அறிவித்து ஆர்வமுள்ள குழந்தைகளை பங்குகொள்ள அழைக்கின்றனர். குளங்களில் இஷ்டம் போல் குழந்தைகள் குளிக்கலாம். மரவீடு கட்டுவது, விளையாடுவது போன்ற அவர்கள் விரும்பும் நடவடிக்கைகளையும் செய்து கொள்ளலாம். மொத்தத்தில் இயற்கையான கற்றல் முறை இது. அழகுதானே!

மூலம்- http://www.vikalpsangam.org/article/more-forests-to-grow-people/#.VfMJQxGqpBc

தமிழில்- ராஜசங்கீதன்