A man builds a wall with plastic bottles in the village of Sabon Yelwa, near the northern Nigerian city of Kaduna. (Photo: Aminu Abubakar/Getty Images)
A man builds a wall with plastic bottles in the village of Sabon Yelwa, near the northern Nigerian city of Kaduna. (Photo: Aminu Abubakar/Getty Images)

ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்டை 14,000 பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் களிமண்ணை கொண்டு கட்டிவிடலாம், தெரியுமா?

அமெரிக்காவில் மட்டும் 4700 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு வருடமும் வீணாக்கப்படுகின்றன. உலகளவில் எடுத்துக்கொண்டால் மொத்த பூமியையும் நான்கு சுற்று சுற்றும் அளவுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு வருடமும் மிஞ்சுகின்றன.

ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் இந்த மாதிரியான கட்டிட முறை பெருமளவுக்கு செயல்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வீணடிக்கப்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல் அதன் நீண்ட ஆயுள் வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கவும் உதவுகிறது.

பாட்டில் சுவர் உத்தியை (bottle wall technique) உருவாக்கிய Ecotec Environmental Solutions என்னும் ஜெர்மன் நிறுவனம் நைஜீரியாவில் பிளாஸ்டிக் பாட்டில் வீடுகள் கட்ட மக்களுக்கு பயிற்சி கொடுக்கிறது.    

மிகவும் எளிய முறைதான். பாட்டில்களில் மண் நிரப்பப்படும். பக்கம் பக்கமாக  அடுக்கப்பட்டு, சேறு அல்லது சிமெண்ட் கலவை கொண்டு ஒட்டப்படுகின்றன. இப்படி கட்டப்படும் சுவர்கள் உறுதியாகவும் நெருப்பால் பாதிக்கப்படாமலும் இருக்கின்றன. செங்கல் சுவர்களைவிட 20 மடங்கு உறுதிகொண்டவை. சராசரியாக ஒரு வீடு கட்ட ஆகும் செலவில் கால்பங்குதான் இதற்கு தேவைப்படுகிறது.

பல சமூக குழுக்கள் இந்த தொழில்நுட்பத்தை உலகளவில் சோதித்து பார்த்து வருகின்றன. Honduras-ல் உள்ள Ecoparque El Zamorano வில் கட்டப்பட்டிருக்கும் Ecotec வீடு 8000 பாட்டில்களால் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்டது. 30 டன் எடையுள்ள கூரையை தாங்கும் சக்தி கொண்டிருக்கிறது. Ecotec பாட்டில் பசுமை வீடுகள், அலுவலக பகிர்வுகள், கொட்டாரங்கள், சுவர்கள், சமூகக்கூடங்கள் போன்றவை டோக்கியோ, அமெரிக்கா, ஐரோப்பா, தென்னமெரிக்கா நாடுகளில் தற்போது தலைகாட்ட துவங்கியிருக்கின்றன.

பாட்டில்களின் கலர் மூடிகள் சுவருக்குள் வெளியே தெரிவதை போல் வைப்பது நல்ல அலங்காரத்தை கட்டிட வடிவங்களுக்கு கொடுக்கும். சிறுநுழைவுகளும் உத்தேசித்து வைக்கப்படுவதால் வெளிச்சத்தை திட்டமிட்டு கலையுணர்ச்சியுடன் அனுமதிக்கக்கூடிய வாய்ப்புகள் இவ்வடிவங்களில் உள்ளன.

சமூகக்குழுக்களின் உதவியால் மாத்திரம்தான் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான இவ்வகை கட்டிடங்களை சாத்தியமாக்க முடியும். பாட்டில்கள் சேகரத்துக்கு, சுத்தப்படுத்துவதற்கு, மறுபயன்பாட்டுக்கு, மண் நிரப்புவதற்கென பல பேரின் பங்களிப்பு தேவைப்படும் வேலை இது.

வளரும் நாடுகளில் பின்பற்றப்படும் இந்த கட்டிட பாணி, வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் நாடுகளிலும் பரவலாக்கப்படுவது இன்னும் நன்மை பயக்கும் என்பதே பலரின் கருத்து.

மூலம்- http://www.takepart.com/article/2015/12/10/plastic-bottle-homes?cmpid=tp-fb