இசை அம்பலம், ஆரோவில் (Isai Ambalam School, Auroville)

http://homegrown.co.in/wp-content/uploads/2014/12/isaiambalamschoolsource-aurovilleradio.jpg

http://homegrown.co.in/wp-content/uploads/2014/12/isaiambalamschoolsource-aurovilleradio.jpg

“கற்றல் என்பது பிறப்பில் தொடங்கி வாழ்க்கை முழுக்க நடைபெற வேண்டும்.”

ஆரோவில் அப்பகுதி மக்களுக்கு கல்வி கொடுக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. சிறுதொழிற்படிப்புகளை முன்னிறுத்தும் கல்வித்திட்டம் கொண்டது. ஆரோவில்லின் வடக்கே அமைந்துள்ள ‘இசை அம்பலம்’ பள்ளியில் 115 மாணவர்கள் பயில்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை இருக்கும் இங்கு, 12 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

ஸ்ரீ அரவிந்தர் அறிவுறுத்திய மூன்று கொள்கைகளை முக்கியமாகக் கொண்டு இங்கு கல்விமுறை இயங்குகிறது. மகிழ்ச்சி, சுதந்திரம், சுயமாய் கற்றல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கல்வி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவனுக்கென தனித்தனி கற்றல்முறை வகுக்கப்படுகிறது.

இங்கு படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் முதல் தலைமுறையாதலால், அவர்களுக்கு தகுந்தார்போல் பல்வேறு வடிவங்களில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அறிவை தருவதோடு, இந்த கற்றல் வடிவங்கள் மனோவியல் திறமைகளையும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், படைப்பாற்றல், சிக்கல்களின்போது சிந்திக்கும் முறை போன்ற வாழ்க்கைத் திறன்களையும் கற்றுத் தருகின்றன.

அனன்யா அறக்கட்டளை, கர்நாடகா (Ananya Trust, Karnataka)

http://www.ananyatrustindia.org/wp-content/uploads/ananya-trust-open-classrooms.jpg
http://www.ananyatrustindia.org/wp-content/uploads/ananya-trust-open-classrooms.jpg

16 வருடங்களுக்கு முன், பெங்களூருக்கு சற்று அருகில், டாக்டர் சசி ராவ் தலைமையில், தெருவோரவாழ் சிறுவர்களுக்கு படிப்பு வழங்க வேண்டுமென்ற கருத்துடன் கூடிய குழுவால் தொடங்கப்பட்டதுதான் அனன்யா அறக்கட்டளை. படிக்க விரும்பும் தெருவோரவாழ் குழந்தைகளை டாக்டர் சசி ராவ்வின் வீட்டிலும் பூங்காக்களிலும் கூட்டி வெறுமனே பேசி, கலந்துரையாடிதான் அறக்கட்டளை ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. அறக்கட்டளைக்கென நீண்ட காலத்திட்டங்களை உருவாக்கியபின், குழந்தைகள் படிப்பதற்கென விளைநிலம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. வருடந்தோறும் 60 மாணவர்களை கொண்டிருக்கும் அறக்கட்டளையில் ஒவ்வொரு மாணவனும் 8-லிருந்து 10 வருடங்கள் வரை தங்குகிறான். அதிலும் இந்த வருடம் அனன்யா அறக்கட்டளைக்கு முக்கியமான வருடம். இங்கு வளர்ந்த மாணவன் ஒருவன் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பு முடிக்கிறான். டாக்டர் சசி ராவின் அர்ப்பணிப்புக்கும் நல்லெண்ணத்துக்கும் வேறென்ன சாட்சி இருக்க முடியும்?

வாழ்க்கையில் கல்வி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை புரியவப்பதன் வழிதான் குழந்தைகளுக்கு எளிதாக கல்வியை கொண்டு செல்ல முடியும். கிரிக்கெட் பந்தயம் ஒன்றை பற்றி பேசும்போது கழித்தல் கணக்கைக் கொண்டு விளக்கலாம். மழை, பூக்கள் ஆகியவற்றை விளக்க ஆரம்பித்து மெல்ல அடிப்படை அறிவியலுக்குள் இட்டுச் செல்லலாம். இப்படித்தான் குழந்தைகளுக்கு கல்வியை புரிய வைக்க முடியும்.

பேர்ஃபுட் கல்லூரியின் இரவுப் பள்ளிகள், டிலோனியா, ராஜஸ்தான் (Night schools in Barefoot College, Tilonia, Rajasthan)

j14-barefoot-college-audience_docpage
அஜ்மருக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் பங்கர் ராயால் (Bunker Roy) தொடங்கப்பட்டது இந்த பேர்ஃபுட் கல்லூரி. இது Social Work and Research Centre (SWRC)  என்றும் அறியப்படும். பங்கர் ராய், கார்டியன் (Guardian) பத்திரிகையால் இவ்வுலகை காப்பாற்றக்கூடிய 50 சூழலியலாளர்களில் ஒருவராகவும் டைம் பத்திரிகையால் உலகின் செல்வாக்கான 100 மனிதர்களில் ஒருவராகவும் அடையாளப்படுத்தப்பட்டவர்.

கிராமங்களில் வாழும் 60லிருந்து 70 சதவிதி சிறார்கள் விறகு சேகரிப்பு, தண்ணீர் எடுத்தல் போன்ற வீட்டு வேலைகளில் அன்றாடம் ஈடுபடுவதால் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. ஆனால், 1979ம் ஆண்டில் பேர்ஃபுட் கல்லூரி கிராமங்களில் அறிமுகப்படுத்திய சூரியப்பால பள்ளிகளின் (Solar Bridge Schools) இரவு நேர வகுப்புகளுக்குப் பின் காட்சிகள் மாறிப் போயின. வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அச்சிறார்கள் படிப்பதற்கு ஏதுவாக இப்பள்ளிகள் அமைந்தன.

இங்கிருக்கும் வகுப்பறை சூழல்கள் மகாத்மா காந்தியின் கருத்தை அடியொற்றி வகுக்கப்பட்டவை. ‘எளிமையான, விலை மலிவான தீர்வுகள்தான் சுலபமாக நீடிக்கக்கூடியவை. வெளி நிபுணர்களால் பிரச்சினைகளை மட்டும் அறிந்து வழங்கப்படும் தீர்வுகள் கிராமப்புற ஏழை மக்களை அடைவதே இல்லை.’ இப்பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள்தான். பேர்ஃபுட் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள். வேலைகள் பார்த்த அலுப்பில் குழந்தைகள் வருவர் என்பதை கருத்தில் கொண்டு, பாடல்கள், விளையாட்டு போன்றவை வழியே செயல்வழி கல்வியை (kinaesthetic or tactile learning methods) இவர்கள் கற்பிக்கிறார்கள்.

சூரிய மின்சாரத்தால் இந்தப் பள்ளிகள் இயங்குகின்றன. அதற்கான சூரிய ஒளி அமைப்புகளை பெண் பொறியாளர்கள் அமைக்கின்றனர். இவர்கள் சூரியப்பாட்டிகள் (Solar Grandmothers) என்று அழைக்கப்படுகிறார்கள்.

“அரசால் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டுமென்பதுதான் ராய்யின் இலக்கு.” என்கிறார் அனுசுயா. “அவர்கள் சூரியத் தகடுகளை உருவாக்கி பயன்பாட்டை உருவாக்கித் தருகிறார்கள். அதற்கான அறிவை வெறும் ஆறு மாதப் பயிற்சியிலேயே அவர்கள் பெற்றுவிடுகிறார்கள். மின் பொறியாளர்களுக்குக் கூட இந்த அறிவு அவ்வளவு எளிதாக சாத்தியமாவதில்லை.”

சூரியப்பால பள்ளிகள் படிப்பவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகள். அதற்கு முன் அவர்கள் படித்தவை அவர்களின் சமூகத்தில் மதிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இப்போது இந்த இரவுப் பள்ளியின் உதவியால் சவால்களை தைரியமாக எதிர்நோக்கும் அளவுக்கான அறிவை அவர்கள் பெறுகிறார்கள்.

ஆனந்த நிகேதன், நவீ தலீம் பள்ளி, சேவாகிராம், வர்தா, மகாராஷ்டிரா (Anand Niketan, Nayee Taleem School, Sevagram, Wardha, Maharashtra)

http://www.nayeetaleem.org/features.html
http://www.nayeetaleem.org/features.html

விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் விதர்பா மாவட்டத்தின் வர்தாவில் அமைந்துள்ள பள்ளி. மராத்தி வழி கல்வி கொடுக்கும் பள்ளியெனினும் ஆங்கிலமும் முக்கியப் பாடமாக கற்பிக்கப்படுகிறது. பலமுறை இந்த பள்ளிக்கு விஜயம் செய்த அனுசுயாவை பொறுத்தவரை, காந்தியக் கொள்கையை பின்பற்றி அங்கு வழங்கப்படும் கல்வி, நிகழ் வாழ்க்கைக்கு தயாராவதற்கும் சிறந்த சமூக விழுமியங்களை உருவாக்குவதற்கும் நல்ல முறையாக இருக்கும் என நினைக்கிறார்.

“குழந்தைகள் பயிலும் பாடங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையாகவும் வாழ்வில் பயன்படுத்தக்கூடியவையாக இருப்பதையும் நான் கண்டேன்” என்னும் அனுசுயா தொடர்ந்து, “உதாரணமாக, முதல் வகுப்பில் அவர்கள் வடிவங்களை முப்பரிமாண படங்களாக வரையக் கற்கின்றனர். தொடர்ந்து வரும், கலைக்கான வகுப்பில் அந்த படங்களுக்கு வண்ணம் பூசுகின்றனர். அதன் பின்னான கணக்கு வகுப்பில் வடிவங்களின் பரப்பு, சுற்றளவு ஆகிய கணக்குகளை பயில்கின்றனர். பின்னர், தோட்டக்கலை வகுப்பில், பயின்ற பரப்பு மற்றும் சுற்றளவு கணக்குகளை கொண்டு, காய்கறி விளைவிக்க விதை நடுகிறார்கள். சமையல் வகுப்பில், அவர்கள் வளர்த்த காய்கறிகளை அவர்களே எடை போடுகிறார்கள். வேதியியல் வகுப்பில் உரங்களை எப்படி உருவாக்குவதென கற்கிறார்கள். வாழ்க்கையை பகுதிப்பகுதியாக விருப்பத்துக்கேற்றார்போல் பிரிக்க முடியாது. ஒன்றொடொன்று தொடர்பு கொண்டே வாழ்வு இயங்கும். இதைத்தான் இங்கிருக்கும் கல்விமுறையும் பிரதிபலிக்கிறது.” எனச் சொல்லி முடிக்கிறார் அவர்.

வாழ்வோடு இயைந்ததாக கல்விமுறை இருக்க வேண்டும் என்பார் காந்தி. அதுபோலவே, இங்கு குழந்தைகள் பருத்தி பறிக்கிறார்கள். அவற்றைக் கொண்டு அவர்களே நூல் நூற்கிறார்கள். ஆசிரியர்களும் ஒத்துழைக்கிறார்கள். மாணவர்களோடு விளையாடி அவர்களும் கற்றுக்கொள்கிறார்கள்.

காந்தி சொல்லும் ஆசிரியப் பணிக்கு மூன்று தூண்கள் உள்ளன. வாழ்க்கை முழுவதும் கற்க வேண்டுமென்பது முதலாவது. அந்த கல்வியின் சமூகப் பங்கு இரண்டாவது. முழுமையை நோக்கிய அக்கல்வியின் செயல்முறை மூன்றாவது. காந்தியை பொறுத்தவரை கல்வி என்பது ஒரு மனிதனின் அறநெறி வளர்ச்சி. அதனால்தான் அந்த வளர்ச்சி வாழ்வு முழுமைக்கும் என்றாகிறது.

மூலம்- http://homegrown.co.in/take-a-look-at-some-of-indias-most-interesting-alternative-schooling-systems/

தமிழில்- ராஜசங்கீதன்