http://www.thebetterindia.com/wp-content/uploads/2014/05/Image-2.jpg
http://www.thebetterindia.com/wp-content/uploads/2014/05/Image-2.jpg

விளையாடுவதும் கற்றலே

பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் விளையாடுவது அவர்களுக்கு நல்லதென்று தெரியும். ஆனாலும் விளையாட்டிற்க்கும், கற்றலுக்கும் உள்ள தொடர்பை கவனிக்க தவறி விடுகிறார்கள். பெரும்பாலானோர் கற்றல் என்பது ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக் கொள்வது என்று மட்டும் எண்ணுகின்றனர். ஆனால் விளையாட்டின் மூலம் கல்வி என்பது குதுகலமானது மட்டுமல்ல குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக உள்ளது.

விளையாட்டு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஊகுவிப்பதோடு இளமைகால வளர்ச்சிக்கும் உதவுகிறது 

உளவியல் நிபுணர் எட்வர்ட் பிஷ்ஷர்,  தன்னுடைய ஆராய்ச்சியின் மூலம் குழந்தைகள் விளையாடும் போது அவர்களின் மூளை வளர்ச்சி பெறுகிறது என கண்டறிந்துள்ளார். இதன் மூலம் சுமார் 33% முதல் 67% அளவிற்கு அவர்களது மொழித்திறனையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கினையும் வளர்க்க உதவுகிறது மேலும் சமூக மற்றும் உணர்ச்சி மேலான்மை பிரச்சனைகளை குறைக்கிறது.

சாத்தியக்கூறுகள்

1949 ம் ஆண்டு  நரம்பியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படும்  டொனால்டு ஹெப் (Donald Hebb),  மூளை வளர்ச்சியின் மேம்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சியை முதன் முதலில் எலிகளைக் கொண்டு “செறிவூட்டல் சோதனை” நிகழ்த்தினார்.

இந்த ஆராய்ச்சியில் இரண்டு எலிகள்,  தனித்தனியாக வெவ்வேறு சூழ்நிலையில் வளர்க்கப்பட்டது. ஒன்று விளையாட்டு பொம்மைகளோடும், மற்றொன்று அவை இல்லாமலும் வளர்க்கப்பட்டது. விளையாடும் சூழ்நிலையில் வளர்ந்த எலியின் மூளை சற்று பெரித்தாக வளர்ந்தும், சுறுசுறுப்பாகவும் இயங்கத் தொடங்கியது. குறிப்பாக கற்றல் மற்றும் நினைவுத்திறன் பகுதிகள் நல்ல வளர்ச்சி அடைந்தது.

விளையாடும் என்ணத்தை தூண்டக்கூடிய சூழலில் வளரும் எலிகள் புத்திசாலிகளாக மாற்றியது. அந்த எலிகளின் பெருமூளை விளையாடுதலின் காரணமாக பெரியதாகி  படிப்பதற்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் வழி வகுக்கிறது. பொறிகளின் இடையே உள்ள வழிகளை கண்டுப்பிடிப்பதற்கும் உதவியது. இதே ஆராய்ச்சியை மற்ற பாலூட்டிகள் மேலும் பறவைகள் மீதும் மேற்கொண்ட போதும் ஒரே விளைவை கொடுத்துள்ளது.

பாசாங்கு விளையாட்டு சமுக பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் அனைவரோடும் பழகவும் உதவுகிறது. விளையாடும் குழந்தைகளே மகிழ்ச்சியான குழந்தைகள்!!

விளையாட்டு  தகவல் தொடர்பு, மொழி கற்றல் போன்ற திறமைகளை வளர்க்க உதவும் என்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிருபணமாகியுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தை தன்னை தாயாக பாவித்து பொம்மை மகளோடு விளையாடும் போது, அவைகளுக்கு பெயர்களைச் சூட்டி அதை குழந்தையாக எண்ணி  கற்றுக்கொடுக்கும் போது, அக்குழந்தையின் திறன் தோராயமாக மூன்று மாதங்களில் மேம்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள்  65 மழலையர்களை கொண்டு நான்கு வாரத்திற்கு ஓர் ஆய்வை நடத்தினர். விளையாட்டுடன் கூடிய படிப்பின் மூலமாக நாடகம், பாசாங்கு, வாசிப்பு, மொழி மற்றும் எழுத்துத்திறன்களையும் இந்த படிப்பின் மூலம் யூகிக்க முடிகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

விளையாட்டுத்தனமான குழந்தைகள் சந்தோஷமாக உள்ளனர்

விளையாடும் போது குழந்தைகள் சமூக தொடர்புகளிடம் ஒத்துழைக்கவும், விதிகளை பின்பற்றவும், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களைத் தானாகவே கற்றுக்கொள்கின்றனர். விளையாடும் குழந்தைகள் சந்தோஷமாகவும் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற குணங்களை மற்ற விளையாடாத குழந்தைகளை காட்டிலும் நன்றாக கற்றுக்கொள்ளுகின்றனர்.

சுகாதார நலன்கள்

விளையாட்டு ஒரு குழந்தைக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், நெகிழ்ச்சியை கையாளும் விதத்தையும், மனநல ஆரோக்கியத்திற்க்கும் வித்திடுகிறது. அதுமட்டும்மல்லாது வலிமை மற்றும் பொறுமையையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணுகிறது.

அது சாதாரணமாக கண்ணாமூச்சி விளையாட்டாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் விளையாடும் பட்சத்தில் அவர்களது கூட்டணைப்பு பலப்படுகிறது. இந்த மாதிரியான சின்ன விஷயங்களை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இது போன்ற காரியங்கள் தான் நம் பிள்ளைகளது மூளை வளர்ச்சிக்கும், அவர்களது குண நலன்களை உருவாக்கிடவும் அவர்களது எதிர் காலத்திற்க்கும் இன்றியமையாததாக அமையும் என்றால் அது மிகையாகாது. நம் குழந்தைகள் சந்தோஷமாக விளையாடும் தருணங்களே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகவும் மதிப்புமிக்க பரிசுகள் ஆகும்.

மூலம்- https://medium.com/rookie-parenting/play-and-learn-kid-s-most-important-job-81f14ef7e68

தமிழில்- ஷாபின் ஜான். வி