http://www.livemint.com/rf/Image-621x414/LiveMint/Period1/2013/12/04/Photos/childsurfing--621x414.jpg
http://www.livemint.com/rf/Image-621×414/LiveMint/Period1/2013/12/04/Photos/childsurfing–621×414.jpg

 

நாம் வளர்ந்த காலத்தில் இருந்த உலகத்தின் சூழ்நிலைகள் இப்பொழுது இருப்பது போல் இல்லை என்பது எல்லோரும் அறிந்தது. முற்றிலும் மாறுபட்ட காலத்தில் நம் குழந்தைகள் வளர்கிறார்கள். அதற்கேற்ப நாம் சந்திக்காத இடர்பாடுகளையும் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

மேற்கூறிய கருத்தால் என்னை தவறாக எண்ண வேண்டாம். நானும் இணையத்தை விரும்புவர்களில் ஒருவன். உண்மையில் இணைய தொடர்பு இல்லாமல் யாரும் இருக்க இயலாத காலத்தில் உள்ளோம். அதே நேரத்தில் சிறுவர்கள் இணையத்தில் நேரத்தை செலவழிக்கும் போது நமக்கு கொஞ்சம் அச்சமாகத்தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இணையத்தை நமது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த சொல்லிக்  கொடுக்க வேண்டும். இணைய பாதுகாப்பு குறிப்புகள் சிலவற்றை கீழே கூறியுள்ளேன்.

பெற்றோர்களின் கட்டுப்பாடு

முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்கு எப்பொழுதுமே முதலிடம். நீங்கள் போதுமான அளவு இணையத்தை பயன்படுத்தியிருந்தால் உங்களுக்கு தெரிந்து இருக்கும். நமக்கு தேவையில்லாத மற்றும் கேள்விக்குரியதான’ வலைத்தளங்கள் , இணைய இணைப்புகள் நம் கண் முன்னால் வந்து நிற்கும். இந்த சூழ்நிலைகளினால்,   நமது குழந்தைகள் மீது நம்பிக்கை இருந்தாலும் அவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது நம் கண்காணிப்பில் இருப்பது போல் பார்த்துக்  கொள்வது நல்லது.

கணினியை பொதுவான இடத்தில் அமைக்கவும் :

நம் கணினியை நம் வீட்டில் அனைவரும் பார்க்குமாறு பொதுவான இடத்தில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் இணையத்தில் இருக்கும் போது நாம் அவர்கள் பின்னாலே இருந்து கொண்டே இருக்க இயலாது. அவ்வாறு இருக்கவும் கூடாது. அதே நேரத்தில் நாமோ அல்லது நம் வீட்டில் உள்ள யாரேனும் அவர்கள் பார்வையிடும் வலைதளத்தை பார்த்துவிட வாய்ப்பு உள்ளது என்ற எண்ணத்தை  அவர்களுக்கு கொண்டுவர வேண்டும்.

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது :

குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் தானாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது கடினமானது. நாம் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது அவசியமாகிறது. இணையத்தில் இருக்கும் இடர்பாடுகளை சிறுவர்கள் அறிந்து இருக்க இயலாது. அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணமாக..

  • தன்னையோ தன் குடும்பத்தை பற்றி எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்தையும் இணையத்தில் பதியவோ, பகிரவோ கண்டிப்பாக கூடாது.
  • எந்த ஒரு இரகசிய கடவுச்சொல்லையும் தன் குடும்பத்தினர்  அல்லாது யாரிடமும் கூறக்  கூடாது.
  • இணையத்தில் எவரையும் கொடுமைப்படுத்துதல் கூடவே கூடாது.
  • இணையதளங்கள் மூலம் சந்திப்பவர்களை நேரில் சந்திக்க கூடாது.

பெற்றோர்கள் – குழந்தைகளின் தொடர்பாடல் :

என்ன நடந்தாலும் உங்களிடம் வந்து பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு குழந்தைகளை பழக்கப்படுத்திக்  கொள்ளுங்கள்,   காலம் கடந்த பின் வருந்தி பயன் ஒன்றும் இல்லை. இந்த வழிகள் எல்லாம் சிறுவர்களுக்கு தேவையான விழிப்புணர்வையும் எவ்வாறு இணையத்தில் எந்த ஒரு இடருமின்றி  பங்கு கொள்ளவும்,  நண்பர்களுடன் உரையாடுவதற்கும், புதுமையான விவரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிய வருவார்கள். தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு  அவர்களை  தள்ளாமல் நாம் மேற்கூறிய விஷயங்களை கையாளுவதன் மூலம் இணையத்தை சிறுவர்களுக்கு பாதுகாப்பானதாக்கிக் கொடுக்கலாம்.

மூலம்- http://equippinggodlywomen.com/parenting/five-must-follow-internet-safety-tips-for-kids/

தமிழில்- ஷாபின் ஜான் . வி