மிட்டிக்கூல் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?  இதற்கு களிமண் மூலம் குளிர் என்று அர்த்தம். இந்த நிறுவனம், வெறும் பத்தாம் வகுப்பு படித்த, தேநீர் கடை நடத்தி வரும் மண்சுக் பாய் ப்ராஜாபதியின் அறிவுக்கு ஒரு சான்று என்றால் அது மிகையாகாது. இவரது அறிய கண்டுபிடுப்பு உலக அளவில் லட்சக்கணக்கான ஏழைகளின் தாகத்திற்கு கிடைத்த ஒரு பரிசு — களிமண் மூலமாக மிகவும் மலிவான ஒரு குளிர்சாதனப்பெட்டி.

http://thynkfeed.com/wp-content/uploads/92.1.jpg
http://thynkfeed.com/wp-content/uploads/92.1.jpg

மண்சுக் பாய் தன் பாரம்பரிய தொழிலான மட்பாண்டத் தொழில் செய்து வந்தவர். ஆனாலும் அதில் நாட்டம் இல்லை, காரணம் அந்த தொழில் அவ்வளவு லாபகரமானதாக  இல்லை. எனவே, மட்பாண்டம்  செய்வதைத்  தவிர்த்து  மேற்கூரை ஓடு செய்யும் தொழிலில் இறங்கலாம் என நினைத்திருந்தார். பின்னர் களிமண்ணிலிருந்து மட்பாண்டம், ஓடுகள் செய்யும் போது ஏன் வேறு பொருள்கள் செய்ய முடியாது என்ற கேள்வி  அவருக்குள் எழுந்தது. அதன் வெளிப்பாடே இந்த களிமண் குளிர் சாதனப்பெட்டி.

http://h.fastcompany.net/multisite_files/fastcompany/imagecache/inline-large/inline/2014/07/3032578-inline-s-mitticool-002.jpg
http://h.fastcompany.net/multisite_files/fastcompany/imagecache/inline-large/inline/2014/07/3032578-inline-s-mitticool-002.jpg

இவ்வாறு உருவானது தான் மிட்டிக்கூல். இந்த நிறுவனம் மட்பாண்டம் மூலம் குளிர்சாதனப் பெட்டிகள்,  வடிகட்டிகள்,  குக்கர் போன்றவற்றில்  நிபுணத்துவம் வாய்ந்தது. “ஆவியாதலின் முடிவில் குளிர் உண்டாகும்” என்னும் கோட்பாட்டிற்கு ஏற்ப செயல்படுவதாகும். இதன் மூலம் உருவாக்கப்படும் குளிர்சாதன பெட்டியின் உள் தண்ணீர் ஊற்றுவதற்கான பாதைகள் உள்ளன. இதில் தண்ணீர் ஊற்றிய பின் அது ஆவியாக்குதலுக்கு  உட்படுத்தப்படுகிறது. ஆவியான பின் உள்ள வெற்றிடம் குளிராக இருக்கும். அந்த குளிரூட்டபட்ட இடம் காய், கனிகளை புதியதாகவும், கெட்டுப் போகாமலும் இருக்க செய்கின்றது. இந்த வகை குளிர்சாதன பெட்டியின் விலை வெறும் ரூ. 3000/- தான். ஆதலால் ஏழை மக்களால் இதை வாங்கி உபயோகிக்க முடிகிறது.

தற்போது மிட்டிக்கூல்  நிறுவனத்தின் ஒரு வருட வர்த்தக கையாடுதல் மட்டும் ரூபாய் 45 லட்சமாகும். மேலும் 35 பேர் வேலை செய்கின்றனர். இந்தியா மட்டும் அல்லாது ஆப்பிரிக்க,  துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு கூட இந்நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. மண்சுக்பாய் தன் பாரம்பரிய தொழிலான களிமண் கலையை தனது தொழில் முனைவோர் திறன்களைக்கொண்டு புதிய உயரத்துக்கு முன்னோக்கி கொண்டு சென்றுள்ளார். இவரது இந்த புதுமையான கண்டுபிடிப்பு குறைந்த செலவிலான தொழில்நுட்பம் மூலமாகவே வந்தது. மின்சாரம் முற்றிலும் தேவையற்றது. இந்த சாதனைகள் அவருக்கே உரியது ,  உண்மையிலேயே மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும்.

மூலம்- http://thelogicalindian.com/story-feed/get-inspired/high-school-dropout-designed-a-refrigerator-that-runs-without-electricity/

தமிழில்- ஷாபின் ஜான். வி