குழந்தை வளர்ப்பு இன்றைய நவீனச்சூழலில் பெற்றோருக்கு பெரும் புதிராக இருக்கிறது. முழுமையான திறன் வளர்ச்சியையும் பசுமையான பால்யகாலத்தையும் ஒன்றிணைப்பது சிரமமான காரியம்தான். திறமைகள் சார்ந்து மட்டுமே இருக்கும் சமூகத்தை நாம் உருவாக்கிவிட்டதால் குழந்தைகள் வெகு சீக்கிரம் சலிப்பு கொண்டுவிடுகின்றனர். அவர்கள் பால்யம் களையிழந்துவிடுகிறது. ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு மிக எளிய வழிகள் இருக்கின்றன. உங்கள் குழந்தைகள் கொண்டுள்ள ஆர்வங்களை கண்டுகொள்ள வேண்டும். முக்கியமாக அவர்கள் விரும்பாத விஷயங்களை ‘திறமை வளர்ப்பு’ என்ற பெயரில் வற்புறுத்தக்கூடாது. கண்டிப்பாக திறமைகள் பால்ய பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டும். முழு வளர்ச்சிக்கு பலதரப்பட்ட அனுபவங்களும் வேண்டும். அனுபவ முதிர்ச்சி மட்டும்தான் குழந்தைப்பருவம் முடிகையில் முழுமையான முதிர்வை தரும். பால்யபருவத்தில் ஒரு குழந்தை பரிச்சயப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை பின்வரும் பத்திகளில் விவரித்துள்ளோம்.

கல்வி கற்க புது உத்தி

இன்றைய உலகில், குழந்தைகளின் வாழ்வை அதிகமாக ஆக்கிரமித்திருப்பது கல்விதான். விளைவாக, அவர்கள் படிப்பை வெறுக்கிறார்கள். மதிப்பெண்கள் பெற, பாடங்களை முழுமையாக புரிந்துகொள்ளாமல் குறுக்குவழிகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களை குற்றமும் சொல்ல முடியாது. ஏனெனில் படிப்பது எப்படி என்ற அடிப்படை பயிற்சியே அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. குருட்டு மனப்பாடம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எல்லா குழந்தைகளும் ஒன்று போல் சிந்திப்பதில்லை. ஒரே மனநிலையை கொண்டிருப்பதில்லை. ஆனால் பள்ளிப்பாடத்திட்டம் சிறு மாற்றம் கொண்ட குழந்தைக்கும் பெரும் சவால் விடுக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களின் குழந்தைகள் வித்தியாசமான ஆர்வங்களை கொண்டிருக்கும்பட்சத்தில், பள்ளிக்கல்வியில் கண்டிப்பாக அவர்கள் பிரகாசிக்கப்போவதில்லை. மாறாக, அவர்களுக்கென உருவாக்கப்படாத படிப்பை படிக்க இன்னும் அதிகமாக கஷ்டப்படுத்தப்படுவார்கள்.

பெற்றோர் செய்யும் மற்றுமொரு முக்கிய தவறு குழந்தைகளை அதிக நேரம் படிக்க வைப்பது. அதிக பயிற்சி நல்ல எந்திரத்தைத்தான் உருவாக்கும். நல்ல மனிதனை அல்ல.

நூற்றுக்கணக்கான கணக்குகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பதால் கணக்குப்பாடத்தில் குழந்தை கரை கண்டுவிடுவதில்லை. சிறு குழப்பத்துடன் ஒரு கணக்கை கொடுத்தாலே போதும், எந்த குழந்தை வெற்று மனப்பாடம் செய்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். இப்படிப்பட்ட கற்றல் குறைகள் ஆரம்பக்கல்வியில் தொடங்கி உயர்கல்வி வரை இருக்கிறது. எதற்கு படிக்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தாதவரை இவை நீடிக்கவே செய்யும்.

வெவ்வேறு விளையாட்டுகள்

Skateboarding tour through Bangalore, Hampi and Goa with 50 skaters from all over the world
http://image1.redbull.com/rbcom/010/2014-07-04/1331663350887_2/0010/1/1500/1000/2/5-surprising-facts-about-indian-skateboarding-dp.jpg

 

பல குழந்தைகள் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, பேட் மிண்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சிலர் ஹாக்கி, கைப்பந்து மற்றும் டென்னிஸ் போன்றவற்றை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இவை மட்டும் விளையாட்டுகள் அல்லவே. குழந்தைகள் எல்லா விளையாட்டுகளையும் முயன்று பார்க்க வேண்டும். முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டுகள் முக்கியமானவை. உடற்பயிற்சி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் கற்றுக்கொடுக்கின்றன. தடைகள் களைய கற்பதற்கும் விளையாட்டு சிறந்த வழி.

பயணங்கள்

http://c8.alamy.com/comp/EK29JW/local-indian-family-on-the-beach-at-pondicherry-or-puducherry-tamil-EK29JW.jpg

என் பால்யகால நினைவுகள் அதிகம் பயணங்களை குறித்துதான் இருக்கின்றன. வீட்டில் வெறுமனே இருக்கையில் நேர்ந்தவை எவையும் என் நினைவுகளில் இல்லை. பயணங்கள் நிகழ் நினைவை கொண்டவை. எப்போது யோசித்தாலும் நிகழில் நடப்பதுபோன்ற உணர்வெழுச்சி கிடைக்கும். ஆகவேதான், விடுமுறை காலங்களை பெற்றோர் தம் குழந்தைகளுடன் வெவ்வேறு பயணங்களில் கழிக்க வேண்டும். குழந்தைகள் பலதரப்பட்ட கலாசாரங்களுக்கு பரிச்சயப்படுவார்கள். பயணங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், உலக ஞானத்தையும் வழங்குகின்றன. கற்றல் பாடங்களோடு முடிந்துவிடக்கூடாது. தனிப்பட்ட அனுபவங்கள் அதிக கற்றலை கொடுப்பவை. தேயிலை கேரளாவிள் விளைகிறது எனப் படித்தறிவதைவிட கேரளாவுக்கே சென்று அந்த பசுமையான தேயிலையை கண்டுணர்வது சிறப்பான கற்றல் அனுபவத்தை கொடுக்கும்.

புதினங்களை, புத்தகங்களை படிப்பது

http://2.bp.blogspot.com/-7nhz4qnZXFo/T0x9tkhXLpI/AAAAAAAAA1I/45OfrltqJrI/s1600/IMG545.jpg
http://2.bp.blogspot.com/-7nhz4qnZXFo/T0x9tkhXLpI/AAAAAAAAA1I/45OfrltqJrI/s1600/IMG545.jpg

 

புத்தகங்கள் பல உலகங்களுக்கான திறப்புகளை கொண்டவை. பல கதாபாத்திரங்கள், பல கதைகள் என அவை அளிக்கும் வெளி அற்புதமானது. ஒவ்வொரு குழந்தையும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பு நல்ல பொழுதுபோக்கையும் அறிவையும் ஒருங்கே வழங்கும் உத்தி. நூலகங்களுக்கு அதிகம் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள். பல வகை புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஊக்குவியுங்கள். மட்டுமல்லாமல் புத்தக வாசிப்பு மொழித்திறனை வளர்க்கவும் பயன்படும்.

இசைக்கருவி பயிற்சி

http://www.theleaf.org/wp-content/uploads/2014/07/LIIndiaGuitars.jpg
http://www.theleaf.org/wp-content/uploads/2014/07/LIIndiaGuitars.jpg

 

பாடத் தெரியாத பல குழந்தைகள் மொத்த இசைத்துறையையும் புறம் தள்ளி விடுகின்றனர். பாடுதல் என்பது இசை என்னும் கடலின் ஒரு துளிதான். பெரும்பாலான குழந்தைகள் இசையை விரும்புவர். ஆனால் இசை உருவாக்கத்தில் பங்குபெற முடியவில்லை என்கிற வருத்தம் அவர்களுக்கு இருக்கும். இசைக்கருவி பயிற்சி அவர்களுக்கு அந்த கவலையை போக்க உதவும். இசை ரசனை என்பதும் முக்கியம். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் இசை ரசனையும் சரியாக அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

கைவினை கலைகள்

http://blog.craftsvilla.com/wp-content/uploads/2015/05/pottery-1.jpg
http://blog.craftsvilla.com/wp-content/uploads/2015/05/pottery-1.jpg

 

காகிதக்கப்பலாகக் கூட இருக்கலாம். உங்கள் குழந்தைகள் அவர்கள் கைகளாலேயே உருவாக்குபவைகளை பாராட்டுங்கள். நாம் விரும்பும் எதுவும் சந்தையில் கிடைக்கும் இக்காலத்தில் களிமண் குழைத்து மண்பாண்டம் செய்யும் அருமை குழந்தைகளுக்கு தெரியாமல் போகலாம். நாம்தான் புரிய வைக்க வேண்டும். பல கைவினை பயிற்சி வகுப்புகள், குழந்தைகள் கைவினை கலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் பொருட்டு நடத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றில் குழந்தைகளை சேர்த்து பயிற்சி பெற வைக்கலாம்.

சமூகக்குழு சேவை

http://voices.nationalgeographic.com/files/2014/02/Screen-Shot-2014-02-20-at-2.01.06-PM-11.jpg
http://voices.nationalgeographic.com/files/2014/02/Screen-Shot-2014-02-20-at-2.01.06-PM-11.jpg

 

தன்னார்வத்தொண்டு புரியும் விருப்பத்தை சிறுவயதிலிருந்தே உருவாக்க வேண்டும். சமூகத்தின் ஒரு பகுதியாக இயங்கும் நாம், உதவி தேவைப்படுவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து கூட்டு வளர்ச்சி உருவாக்க பயன்பட வேண்டும். இது சமூகத்துக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு பணிவையும் பொறுப்புணர்ச்சியையும் கற்றுக்கொடுக்கும். முதியோர்க்கு சேவை புரிவது, சுகாதார பணிகள், அனாதரவானவர்களுக்கு உணவளிப்பது என பல சாத்தியங்கள் தன்னார்வ தொண்டில் உள்ளன.

மூலம்- http://blog.gyanlab.com/ten-activities-every-child-should-be-exposed-to/

தமிழில்- ராஜசங்கீதன்